இவர் மற்றொரு எலான் மஸ்க் | Ep-48 | Ajaykumar Periasamy | Tamil Podcast
Description
ஆப்பிரிக்காவின் எலான் மஸ்க் கெல்வினின் கதை!
ஆப்பிரிக்காவின் கானாவில் அக்ரா என்னும் இடத்தில், நடுத்தரக் குடும்பம் ஒன்றில் கெல்வின் ஒடார்டெய் க்ரூய்க்ஷங் பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே கெல்வினுக்குக் கார்களின் மேல் தீவிர காதல்; ஏழு வயதிலிருந்தே ரிமோட் கன்ட்ரோல் மாதிரிகளை உருவாக்கத் தொடங்கிவிட்டார். பதினைந்து வயதில் தன்னுடைய கனவைப் பின் தொடர்ந்து, உலக அளவில் அங்கீகாரம் பெறும் கார் ஒன்றை உருவாக்கத் தொடங்கிய இவர், தன்னுடைய பள்ளி இறுதி நாளின்போது லம்போர்கினி போன்ற ஒரு காரை ஓட்டிவந்து எல்லோரையும் திகைக்கச் செய்தார்.
“உலோகங்களுடன், அழுக்கில் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்றே என்னுடைய தாயார் முதலில் நினைத்தார்; நான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பிய அவர், சில நேரங்களில் கோபத்தில் அந்த உலோகங்களை எடுத்துத் தூர எறிந்துவிடுவார்”, என்று தன்னுடைய முயற்சியின் தொடக்கக் காலம் குறித்து கெல்வின் கூறுகிறார்.
தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற, பொருளாதார தேவைக்காக சிறுசிறு வேலைகளை கெல்வின் பார்த்துள்ளார். பல நேரங்களில் அந்தப் பழைய உலோகங்களை வாங்குவதற்காக, பட்டினி கிடந்து பணத்தைச் சேமித்திருக்கிறார்.
அவருடைய அம்மாவின் எதிர்ப்பு மட்டுமே அவருடைய இந்த முயற்சிக்குத் தடையாக இருக்கவில்லை; இத்திட்டம் பற்றி கெல்வின் யாரிடம் பேசினாலும் அவர்கள் சந்தேகத்துடனும் ஏளனத்துடனும் பார்த்திருக்கின்றனர். இதைக் கைவிடச் சொல்லி சிலர் வலியுறுத்தியிருக்கின்றனர். ஆனாலும் மனம் தளராமல் பழைய உலோகங்கள் மற்றும் குப்பையில் கிடந்த உலோகங்களைக் கொண்டு தன்னுடைய கனவுக் காரை கெல்வின் மெல்ல மெல்ல உருவாக்கிக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு முறையும் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து காரை இயக்கத் தொடங்கும்போது, அது எதிர்பார்த்த மாதிரி வரவில்லை என்றால் கெல்வின் சோர்ந்து போய்விடவில்லை. கைவிடுவது ஒருபோதும் ஒரு நல்ல முடிவாக இருக்காது என்ற கொள்கையில் அவர் தொடர்ந்து முயன்றார்.
“யார் என்ன சொன்னாலும் சரி, நான் என் கனவைக் கைவிடப் போவதில்லை...” என்ற தீர்மானத்துடன் இயங்கிவந்த கெல்வின், “இறுதியில் ஒருநாள் என்னுடைய கார் ஸ்டார்ட் ஆனதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று தன் கனவு வெற்றி பெற்றது குறித்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார். கெல்வினின் இந்த வெற்றி குறித்த செய்தி நாடு முழுவதும் பரவியது.
இந்த காரின் மூலம் முதலீட்டாளர்களை ஈர்த்து, இது சார்ந்து மேலும் கற்று தன்னுடைய திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்கிறார் கெல்வின். நோக்கம் வெற்றி பெறட்டும்!
🏆வேண்டுமா வெற்றிக்கான மாற்றம்..
கிளிக் செய்து கேளுங்கள் இப்போதே.
https://linktr.ee/TheMillionaireMindsetFM
www.facebook.com/AjaykumarPeriasamy
www.youtube.com/AjaykumarPeriasamy
நீங்கள் விரும்புவதைக் கண்டுபிடித்து உங்கள் இலக்குகளை அடைய நான் உங்களுக்கு உதவ முடியும்,
நீங்கள் தேடும் தெளிவை உங்களுக்கு வழங்குவதே எனது ஒரே குறிக்கோள்.
For Personal Coaching, Speeches and Personal Development Consultancy : ajaykumarperiasamy@gmail.com























